செய்திகள்

மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க தடை: ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2016-09-23 03:07 GMT   |   Update On 2016-09-23 03:07 GMT
மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
மதுரை:

கடந்த 2013-ம் ஆண்டு திண்டுக்கல்லில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக கூறி மு.க.ஸ்டாலினை அவதூறு சட்டப்பிரிவின்கீழ் தண்டிக்க வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், முதன்மை அரசு வக்கீல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு திண்டுக்கல் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, திண்டுக்கல் கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் மீது நிலுவையில் உள்ள அவதூறு வழக்கை விசாரிக்க தடை விதித்து உத்தரவிட்டார்.

Similar News