செய்திகள்

நெல்லை மாவட்டம் கூட்டப்புளி கிராமத்தில் சுனாமி ஒத்திகை

Published On 2016-09-07 06:04 GMT   |   Update On 2016-09-07 06:04 GMT
நெல்லை மாவட்டம் கூட்டப்புளி கடற்கரை கிராமத்தில் இன்று (புதன்கிழமை) சுனாமி பேரிடர் ஒத்திகை முகாம் புனித சூசையப்பர் ஆலயம் முன்பு நடந்தது.
வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் கூட்டப்புளி கடற்கரை கிராமத்தில் இன்று (புதன்கிழமை) சுனாமி பேரிடர் ஒத்திகை முகாம் புனித சூசையப்பர் ஆலயம் முன்பு நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கருணாகரன் தலைமை தாங்கினார். சேரன்மகாதேவி சப்-கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகித்தார்.

இதில் வருவாய்த்துறை, காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் கலந்து கொண்டு சுனாமி ஏற்பட்டால் அதிலிருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது? சுனாமியில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது? வெடிகுண்டு வெடித்தால் அதிலிருந்து பொதுமக்களை மீட்பது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர். இதனை அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன், வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணபாபு மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News