செய்திகள்
வங்காளதேச டெஸ்ட் கிரிக்கெட் அணி

வங்காளதேசம் - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு

Published On 2019-09-24 13:40 GMT   |   Update On 2019-09-24 13:40 GMT
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்று விளையாட இருந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் வரும் இந்தத் தொடர் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் தற்போது ஜூன் - ஜூலைக்கு தள்ளி போடப்பட்டுள்ளது.  ‘‘எதிர்கால போட்டித் தொடர் நிகழ்வின்படி, நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் நடத்த வேண்டும்.

ஆனால், தற்போது டெஸ்ட் தொடர் ஜூன் - ஜூலையில் நடத்தப்படும்’’ என வங்காளதேச கிரிக்கெட் போர்டின் கிரிக்கெட் செயல்அதிகாரி அக்ரம் கான் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News