செய்திகள்
அப்துல்காதிர்

அப்துல்காதிர் மறைவு பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இழப்பு - இம்ரான்கான்

Published On 2019-09-07 11:01 GMT   |   Update On 2019-09-07 11:01 GMT
அப்துல்காதிர் மறைவு பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இழப்பு என பிரதமரும், முன்னாள் ஆல்ரவுண்டரான இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
லாகூர்:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் அப்துல்காதிர்.

1970 மற்றும் 1980-ம் ஆண்டுகளில் தனது மந்திர சுழற்பந்து வீச்சால் எதிர் அணி பேட்ஸ்மேன்களை திணறடித்தவர்.

இந்த நிலையில் அப்துல் காதிர் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63.

லெக்ஸ் ஸ்பின்னராக அவருக்க மனைவியும், 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவரது மகளை பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் உமர் அக்மல் திருமணம் செய்துள்ளார்.

அப்துல்காதிர் திடீர் மரணத்தால் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் ஆல்ரவுண்டருமான இம்ரான்கான் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இம்ரான் கான் தனது டுவிட்டர் பதிவில் கூறி கூறியிருப்பதாவது:-



எனது நெருங்கிய நண்பரும், என்னுடன் விளையாடியவருமான அப்துல் காதிரின் மரணம் பெரிய இழப்பாகும். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்த்தது பிரகாசத்தை ஏற்படுத்தியவர். உலக அளவில் அவரது பெயர் என்றுமே நிலைத்து நிற்கும். அவர் ஒரு சிறந்த வீரர் ஆவார்.

இவ்வாறு இம்ரான்கான் கூறியுள்ளார்.

இதேபோல ஜாவித் மியாண்டட், டேனிஷ் கனேரியா உள்ளிட்ட பல வீரர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். அப்துல்காதிரின் பந்து வீச்சு ஸ்டைலை தான் வார்னே, முஸ்தாக் அகமது பின்பற்றினார்கள்.

அப்துல்காதிர் 67 டெஸ்டில் விளையாடி 236 விக்கெட்டும், 104 ஒரு போட்டியில் 132 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளார். 56 ரன் கொடுத்து 9 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த டெஸ்ட் பந்து வீச்சு ஆகும். 1983 மற்றும் 1987 உலக கோப்பைகளில் விளையாடி இருந்தார்.
Tags:    

Similar News