செய்திகள்
வங்காளதேச டெஸ்ட் கிரிக்கெட் அணி

ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கான வங்காள தேச அணி அறிவிப்பு

Published On 2019-08-30 13:01 GMT   |   Update On 2019-08-30 13:01 GMT
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டிக்கான வங்காள தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வங்காள தேசம் சென்று ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அதற்கான வங்காள தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மானுக்கு இடம் கிடைக்கவில்லை. ஷாகிப் அல் ஹசன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்காள தேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ஷாகிப் அல் ஹசன், 2. சவுமியா சர்கார், 3. ஷத்மான் இஸ்லாம், 4. மொமினுல் ஹக்யூ, 5. முஷ்பிகுர் ரஹிம், 6. லித்தோன் தாஸ், 7. மெஹ்முதுல்லா, 8. மிதுன், 9. தைஜூல் இஸ்லாம், 10. மெஹிதி ஹசன் மிராஸ், 11. முசாடெக் ஹொசைன் சைகாட், 12. நயீம் ஹசன், 13. அபு ஜாயெத் ரஹி, 14. தஸ்கின் அகமது, 15. எபாடொட் ஹொசைன்.
Tags:    

Similar News