செய்திகள்
உ.பி. யோதா - புனேரி பல்தான் அணிகள் மோதிய காட்சி

புரோ கபடி லீக் - உ.பி.யோதா அணி 4-வது வெற்றி

Published On 2019-08-27 09:14 GMT   |   Update On 2019-08-27 09:14 GMT
புரோ கபடி லீக் போட்டியில் உ.பி. யோதா 35-30 என்ற கணக்கில் புனேரி பல்தானை தோற்கடித்து 4-வது வெற்றியை பெற்றது.
புதுடெல்லி:

7-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியின் 6-வது கட்ட ஆட்டங்கள் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் 36-33 என்ற கணக்கில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தியது.

அரியானா பெற்ற 6-வது வெற்றியாகும். பெங்காலுக்கு கிடைத்த 3-வது தோல்வியாகும்.

மற்றொரு ஆட்டத்தில் உ.பி. யோதா 35-30 என்ற கணக்கில் புனேரி பல்தானை தோற்கடித்தது. உ.பி.யோதா பெற்ற 4-வது வெற்றியாகும். புனே அணி 6-வது தோல்வியை தழுவியது.

61 ஆட்டங்கள் முடிவில் டெல்லி அணி முதல் இடத்திலும் (39 புள்ளிகள்), ஜெய்ப்பூர் 2-வது இடத்திலும் (37), பெங்கால் 3-வது இடத்திலும் (34) உள்ளன.

பெங்களூரு புல்ஸ் 4-வது இடத்திலும் (33), அரியானா 5-வது இடத்திலும் (31), மும்பை 6-வது இடத்திலும் (29 புள்ளி) உள்ளன.

உ.பி.யோதா (27), குஜராத் (25), தமிழ்தலைவாஸ் (25), தெலுங்கு டைட்டன்ஸ் (23), புனே (20), பாட்னா (18) ஆகிய அணிகள் முறையே 7 முதல் 12-வது இடங்களில் உள்ளன.
Tags:    

Similar News