செய்திகள்
பிவி சிந்து

உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: தங்கம் வென்று பிவி சிந்து வரலாறு படைத்தார்

Published On 2019-08-25 13:02 GMT   |   Update On 2019-08-25 13:02 GMT
உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தங்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்தார்.
உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார்.

இரண்டு முறை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிவி சிந்து இந்த முறை எப்படியாவது தங்கம் வென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கினார்.

ஆட்டம் தொடங்கியது முதலே பிவி சிந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்திற்கு ஒகுஹராவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் முதல் செட்டை 21-7 என பிவி சிந்து எளிதாக கைப்பற்றினார்.



2-வது செட்டிலும் அதே உத்வேகத்துடன் விளையாடினார். இதனால் 2-வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தி, அதையும் 21-7 எனக் கைப்பற்றி தங்கம் வென்றார்.



இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் முதன்முதலாக தங்கம் வென்ற இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை பிவி சிந்து படைத்துள்ளார்.
Tags:    

Similar News