செய்திகள்
விக்ரம் ரத்தோர்

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் தேர்வாக வாய்ப்பு

Published On 2019-08-22 15:34 GMT   |   Update On 2019-08-22 15:34 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சியாளர்களுக்கான இறுதிப்பட்டியல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்ட நிலையில் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டர் பயிற்சியாளர்களை தேர்வு செய்யும் பணியை தேர்வுக்குழு உறுப்பினர்கள் மேற்கொண்டு வந்தனர்.

பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் 14 பேரிடம் நேர்காணல் செய்தனர். இதில் இருந்து மூன்று பேர் கொண்ட இறுதிப்பட்டியலை தயார் செய்துள்ளது. அதில்  விக்ரம் ரத்தோர், சஞ்ச் பாங்கர், மார்க் ராம் பிரகாஷ் ஆகிய மூன்று பேர் இடம் பிடித்துள்ளனர்.

பவுலிங் கோச்சர் பதவிக்கு 12 பேரிடம் நேர்காணல் நடத்தினர். இதில் இருந்து மூன்று பேர் கொண்ட இறுதிப்பட்டியலை தயார் செய்துள்ளது. அதில்  பரத் அருண், பராஸ் பம்ப்ரே, வெங்கடேஷ் பிரசாத் ஆகிய மூன்று பேர் இடம் பிடித்துள்ளனர்.

பீல்டிங் கோச்சர் பதவிக்கு 9 பேரிடம் நேர்காணல் நடத்தினர். இதில் இருந்து மூன்று பேர் கொண்ட இறுதிப்பட்டியலை தயார் செய்துள்ளது. அதில்  ஆர் ஸ்ரீதர், அபேய் சர்மா, டி திலிப் ஆகிய மூன்று பேர் இடம் பிடித்துள்ளனர்.

இவர்களில் ஒருவரை பயிற்சியாளராக தேர்வு செய்வார்கள். ஏற்கனவே பந்து வீச்சாளர் பயிற்சியாளராக இருக்கும் பரத் அருணும், பீல்டிங் கோச்சராக இருக்கும் ஆர் ஸ்ரீதரும் முதல் இடத்தில் உள்ளனர்.

ஆனால் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் சஞ்சய் பாங்கரை பின்னுக்குத் தள்ளி விக்ரம் ரத்தோர் முதல் இடத்தில் உள்ளார். இதனால் சஞ்சய் பாங்கர் மட்டும் மாற்றப்படுவார் எனத் தெரிகிறது.
Tags:    

Similar News