செய்திகள்
ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் ஸ்டீவ் ஸ்மித்

ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்த பொறுமை மிகவும் அவசியம்: இங்கிலாந்துக்கு ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் அறிவுரை

Published On 2019-08-14 14:32 GMT   |   Update On 2019-08-14 14:32 GMT
ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் முதுகெலும்பை வீழ்த்த பொறுமை மிகவும் அவசியம் என்று ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் அறிவுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து 251 ரன்கள் வித்தியாசத்தில் படதோல்வியடைந்தது.

இங்கிலாந்து தோல்விக்கு முக்கிய காரணம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்துதான். 12 மாத தடைக்குப்பின் மீண்டும் களம் இறங்கிய அவர் முதல் இன்னிங்சில் 144 ரன்களும், 2-வது இன்னிங்சில் 142 ரன்களும் குவித்தார்.

இங்கிலாந்து ஆஷஸ் தொடரை கைப்பற்ற ஸ்மித் வில்லனாக இருப்பார் என்று கருதப்படுகிறது. இதனால் அவரை எப்படி வீழ்த்துவது என்பது குறித்து தீவிர ஆலோசனை செய்து வருகிறது இங்கிலாந்து.

இந்நிலையில் ஸ்மித்தை வீழ்த்த வேண்டுமென்றால் பொறுமை மிகமிக அவசியம் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், தலைசிறந்த தொடக்க பேட்ஸ்மேனாக திகழ்ந்தவரும் ஆன ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் கூறுகையில் ‘‘ஸ்மித் மிகவும் சிறப்பாக விளையாடினார். அற்புதமான ஆட்டம். என்றாலும், சில இடத்தில் அவர் திணறுகிறார். அதனால் பந்து வீச்சாளர்கள் அதற்கான பொறுமையாக காத்திருக்க வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News