செய்திகள்
மொயீன் அலி

ஆஷஸ் அணியில் இருந்து அதிரடி நீக்கம்: கிரிக்கெட்டுக்கு சிறிது காலம் இடைவெளி விட்டார் மொயீன் அலி

Published On 2019-08-13 15:05 GMT   |   Update On 2019-08-13 15:05 GMT
எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் மோசமாக விளையாடியதால் அதிரடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டதால், கிரிக்கெட்டுக்கு சிறிது காலம் இடைவெளி விட்டுள்ளார் மொயீன் அலி.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 251 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

இதில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான மொயீன் அலி டக்அவுட் ஆனார். 2-வது இன்னிங்சில் 4 ரன்கள் சேர்த்தார். இரண்டு இன்னிங்சிலும் நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். மேலும் முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி நாதன் பந்தில் ஆட்டமிழந்ததால் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் விலகியிருக்க முடிவு செய்துள்ளார் என அவர் விளையாடும் கவுன்ட்டி அணியான வொர்செஸ்டர்ஷைர் அணி தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News