செய்திகள்
அரை சதமடித்த கோபிநாத்

டிஎன்பிஎல் கிரிக்கெட் - தூத்துக்குடிக்கு 128 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

Published On 2019-08-09 11:29 GMT   |   Update On 2019-08-09 11:29 GMT
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் இன்றைய லீக் ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்அணி வெற்றி பெற 128 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.
திருநெல்வேலி:

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் இன்றைய லீக் ஆட்டம் திருநெல்வேலியில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், சேப்பக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கங்கா ஸ்ரீதர் ராஜுவும், கோபிநாத்தும் களமிறங்கினர்.

முதல் பந்திலேயே ஸ்ரீதர் கங்கா ராஜு அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.  அடுத்து இறங்கிய கேப்டன் கவுசிக் காந்தி 15 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. 

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் கோபிநாத் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், சேப்பாக் சூப்ப்ர் கில்லீஸ் அணி 19.3 ஓவரில் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தூத்துக்குடி சார்பில் கார்த்திக் சண்முகம் 3 விக்கெட், தமிழ்க்குமரன், பூபாலன், அதிசயராஜ் டேவிட்சன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
Tags:    

Similar News