செய்திகள்
பிரித்வி ஷா

ஊக்க மருந்து சர்ச்சை: பிரித்வி ஷா விளையாட 8 மாதம் தடை

Published On 2019-07-30 16:11 GMT   |   Update On 2019-07-30 16:11 GMT
தடை செய்யப்பட்ட அளவு ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதற்காக இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷாவுக்கு 8 மாத காலம் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான பிரத்வி ஷாவுக்கு சையத் முஷ்டாக் தொடரில் விளையாடுவதற்காக பிப்ரவரி மாதம் இந்தூரில் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், தடை செய்யப்பட்ட ஊக்கமூட்டும் தன்மையுடைய இருமல் மருந்தினை பிரித்வி ஷா உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஜூலை 16-ம் தேதி அவர் மீது குற்றசாட்டும் முன் வைக்கப்பட்டது.

இந்நிலையில், பிரித்வி ஷா இந்திய அணியில் விளையாட மார்ச் 16-ம் தேதி முதல் நவம்பர் 15-ம்தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.



மும்பையைச் சேர்ந்த இளம் வீரரான பிரித்வி ஷா இந்திய அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வார் என பலர் பாராட்டியுள்ளனர். சர்வதேச போட்டிகளைப் பொறுத்தவரை இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி 237 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு சதமும் அவர் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News