செய்திகள்
தூத்துக்குடி அணி வீரர் பந்தை விளாசிய காட்சி.

டிஎன்பிஎல் கிரிக்கெட்: கோவை கிங்ஸ் அணிக்கு 156 ரன்களை இழக்காக நிர்ணயித்தது தூத்துக்குடி

Published On 2019-07-25 17:28 GMT   |   Update On 2019-07-25 17:28 GMT
மழை காரணமாக ஆட்டம் 13-ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் கோவை கிங்ஸ் அணிக்கு 156 ரன்களை இழக்காக நிர்ணயித்தது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்.
திண்டுக்கல்:

தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 8-வது ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று நடந்து வருகிறது. மழை காரணமாக ஆட்டம் 13 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் அபினவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து, தூத்துக்குடி அணியின் தொடக்கவீரர்களாக அக்‌ஷய் ஸ்ரீனிவாசன் மற்றும் செந்தில் நாதன் களமிறங்கினர். செந்தில் நாதன் (0) ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் ஸ்ரீனிவாசனுடன் ஜோடி சேர்ந்த அணியின் கேப்டன் சிவா கோவை வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்தனர். ஸ்ரீனிவாசன் 11 பந்துகளில் 4 சிக்சர்கள் உள்பட 31 ரன்கள் விளாசிய நிலையில் அவுட் ஆனார். சிறப்பாக ஆடிய அணியின் கேப்டன் சிவா 21 பந்துகளில் 5 சிக்சர்கள் உள்பட 44 ரன்கள் குவித்தார்.

இறுதியில், அதிரடியாக ஆடிய அந்த அணியின் சரவணன் 12 பந்துகளில் 29 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் 13 ஓவர்கள் முடிவில் தூத்துக்குடி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவித்தது.

கோவை கிங்ஸ் தரப்பில் அந்த அணியின் அந்தோணி தாஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து கோவை அணி வெற்றிபெற 156 ரன்கள் இழக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News