செய்திகள்
ஜெகதீசன் பந்தை விளாசும் காட்சி.

டிஎன்பிஎல்: மதுரை அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது திண்டுக்கல் டிராகன்ஸ்

Published On 2019-07-22 15:40 GMT   |   Update On 2019-07-22 15:40 GMT
தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ஏதிரான ஆட்டத்தில் 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல் டிராகன்ஸ்.
திருநெல்வேலி:

தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் 5-வது போட்டி திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற மதுரை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, திண்டுக்கல் அணியின் ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் ஏதிரணியின் பந்து வீச்சை சிதறடித்து அரை சதம் அடித்தனர். நிஷாந்த் 57 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். பின்னர் வந்த அந்த அணியின் கேப்டன் அஸ்வின் 16 ரன்களில் வெளியேறினார். 

அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறு முனையில் சிறப்பாக ஆடிய ஜெகதீசன் 51 பந்துகளில் 87 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. மதுரை அணி தரப்பில் அந்த அணியின் ரஹில் ஷா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Tags:    

Similar News