செய்திகள்
டோனி

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் டோனி இல்லை - பிசிசிஐ

Published On 2019-07-20 09:46 GMT   |   Update On 2019-07-20 09:46 GMT
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் எம்.எஸ்.டோனி கலந்து கொள்ளவில்லை, இப்போது ஓய்வும் பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை:

நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்ததிலிருந்து டோனியின் எதிர்காலம் குறித்த ஊகங்கள் தீவிரமடைந்தன. 

டோனியின் நீண்ட கால நண்பரான அருண் பாண்டே, அவரது விளையாட்டு மேலாண்மை நிறுவனமான ரிதி ஸ்போர்ட்ஸூக்கு தலைமை தாங்குவதோடு தனது வணிக நலன்களை கவனித்து வருகிறார். பி.டி.ஐ.க்கு பேட்டியளித்த அருண் பாண்டே, டோனி ஓய்வு பெறுவதற்கான உடனடி திட்டங்கள் எதுவும் இல்லை. அவரைப் போன்ற ஒரு சிறந்த வீரரின் எதிர்காலம் குறித்த தொடர்ச்சியான ஊகங்கள் வருவது துரதிர்ஷ்டவசமானது என கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்தவுடன், டோனியின் எதிர்கால திட்டங்கள் குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் டோனி தனது துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்கு தெரிவித்துள்ளார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அவர் கலந்து கொள்ள மாட்டார்.  பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ  லெப்டினன்ட் கர்னல் ஆவார் டோனி .

இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

"நாங்கள் மூன்று விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறோம். எம்.எஸ். டோனி இப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை. அவர் முன்னர் செய்த தனது துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய இரண்டு மாத ஓய்வு நாளை எடுத்து உள்ளார். கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வுக்குழு  தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் ஆகியோரின் முடிவை நாங்கள் இப்போது அறிவித்துள்ளோம் என கூறினார்.
Tags:    

Similar News