செய்திகள்

ஸ்பெயின் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக் ராஜினாமா

Published On 2019-06-20 11:07 GMT   |   Update On 2019-06-20 11:07 GMT
பார்சிலோனா அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான லூயிஸ் என்ரிக் ஸ்பெயின் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக். 49 வயதாகும் இவர் ரோமா, செல்டா, பார்சிலோனா போன்ற தலைசிறந்த கால்பந்து கிளப் அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார்.

2014 முதல் 2017 வரை பார்சிலோனா அணியில் தலைமை பயிற்சியாளராக இருந்தார். அதன்பின் கடந்த ஆண்டு ஸ்பெயின் சர்வதேச கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்றார். தற்போது ஸ்பெயின் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவில் இருந்து விலகியுள்ளார். தனது சொந்த காரணத்திற்காக பதவியை ராஜினாமா செய்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் பணியில் இருந்து ஒதுங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது துணைப் பயிற்சியாளராக இருக்கும் மொரேனோ தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
Tags:    

Similar News