செய்திகள்

ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி அசாம் பந்து வீச்சாளர் சாதனை

Published On 2019-06-14 11:58 GMT   |   Update On 2019-06-14 11:58 GMT
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அர்பன் தத்தா மாவட்ட அளவிலான ஆட்டத்தில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
அசாம் மாநில கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான அணிகளுக்கு இடையில் நுருதின் அகமது டிராபி நடைபெற்று வருகிறது. ஒரு ஆட்டத்தில் சிவசாகர் - சாரைடியோ அணிகள் மோதின. சாரைடியோ அணி பேட்டிங் செய்யும்போது சிவசாகர் அணியைச் சேர்ந்த 25 வயது இடது கை சுழற்பந்து வீச்சாளரான அர்பன் தத்தா 10 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி சாதனைப் படைத்தார்.

அவர் 19 ஓவரில் 48 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க, சாரைடியோ 121 ரன்னில் ஆல்அவுட் ஆனது. என்றாலும் இந்த போட்டி டிராவில் முடிந்துள்ளது. அர்பன் தத்தா அசாம் மாநில அணிக்காக U-19 உள்பட பல அணிகளில் இடம்பிடித்து விளையாடியுள்ளார். கடந்த ரஞ்சி டிராபி தொடருக்கான அசாம் அணியில் இடம் பிடித்திருந்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம் லேகர், அனில் கும்ப்ளே ஆகியோர் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுக்களை சாய்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News