செய்திகள்

‘பவர் ஹிட்டிங்’ இல்லாமல் நம்பர் ஒன் ஆக முடியும் என்றால், அந்த ஹிட்டிங் தேவையில்லை: பாபர் ஆசம்

Published On 2019-04-22 12:31 GMT   |   Update On 2019-04-22 12:31 GMT
பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த வீரரான பாபர் ஆசம், ‘பவர் ஹிட்டிங்’ இல்லாமல் நம்பர் ஒன் ஆக முடியும் என்றால் அந்த ஹிட்டிங் எனக்கு தேவையில்லை எனக் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் பாபர் ஆசம். கிரிக்கெட் ‘ஷாட்’டுகளை துல்லியமாக அடிப்பதில் தலைசிறந்தவர். இவரை பாகிஸ்தான் விராட் கோலி என்று அழைக்கின்றனர். கிறிஸ் கெய்ல், அந்த்ரே ரஸல் போன்று இவரால் ‘பவர் ஹிட்டிங்’ சிக்ஸ் அடிக்க முடியாது. ஆனால், பந்துகளை மைதானத்தின் அனைத்து திசைகளுக்கும் சிதறவிடுவதில் வல்லவர்.

டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பாபர் ஆசம், ‘‘என்னால் பவர் ஹிட்டிங் இல்லாமல் நம்பர் ஒன் வீரராக முடியும் என்றால், அந்த நான் செய்ய வேண்டிய தேவையில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.



மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘பவர் ஹிட்டிங் இல்லாமல் நம்பர் ஒன் வீரராக இருக்க முடியும் என்றால், அந்த பவர் ஹிட்டிங் ஷாட்டுகளை நான் அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், எனக்கு தேவை என்று வரும்போது அதை பயன்படுத்திக் கொள்வேன்.

நான் பந்தை மைதானத்திற்கு வெளியே அனுப்பும் வகையில் பயிற்சி செய்து வருகிறேன். அது தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்வேன். என்னுடைய தனிப்பட்ட வேலை என்னவெனில், நிலைத்து நின்று ஆடி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுப்பதாகும்’’ என்றார்.
Tags:    

Similar News