செய்திகள்

ஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Published On 2019-04-21 10:13 GMT   |   Update On 2019-04-21 19:19 GMT
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வார்னர், பேர்ஸ்டோவ் அபார ஆட்டத்தால் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #SRHvKKR
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 4 மணிக்கும் தொடங்கும் முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடக்கும் இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 159 ரன்களை எடுத்துள்ளது. கொல்கத்தா அணி தரப்பில் அதிக பட்சமாக கிறிஸ் லின் 51 ரன்னும், சுனில் நரைன் 25 ரன்னும், ரிங்கு சிங் 31 ரன்னும் எடுத்தனர். 

பந்து வீச்சாளர்கள் தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டும், சந்தீப் சர்மா மற்றும் ரஷித் கான் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். 

பின்னர் 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் அணி 15 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 161 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. 

தொடக்க வீரர்களான வார்னர் 67 ரன் எடுத்து அவுட் ஆனார். பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 80 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.  #SRHvKKR
Tags:    

Similar News