செய்திகள்

ஐ.பி.எல். சூதாட்டம் - இந்திய பெண்கள் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கைது

Published On 2019-04-03 11:00 GMT   |   Update On 2019-04-03 11:01 GMT
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக இந்திய பெண்கள் அணியின் முன்னாள் பயிற்சியாளர் துஷ்கர் கைது செய்யப்பட்டார். #IPL2019 #TusharArothe
ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டம் மொகாலியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பஞ்சாப் அணி 14 ரன்னில் வெற்றி பெற்றது.

இந்தப்போட்டி தொடர்பாக குஜராத் மாநிலம் அல்காபுரி என்ற இடத்தில் உள்ள காபிஷாப்பில் ‘பெட்டிங்’ நடத்தப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு மிகப்பெரிய அளவில் ஐ.பி.எல். சூதாட்டம் (பெட்டிங்) நடந்தது தெரியவந்தது. மொபைல் போனை ஆய்வு செய்ததில் அனைத்து விவரங்களும் தெரிந்தது.

அந்த காபி ஷாப் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரருமான துஷ்கர் ஆரோத்துக்கு சொந்தமானது என்பது தெரிந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவருடன் அவரது வியாபார பங்கு தாரர்கள் ஹேமங் படேல், நீச்சல் மிதா ஆகியோரும் கைதானார்கள்.

இதற்கிடையே துஷ்கர், “தான் அப்பாவி என்றும், தனது காபி ஷாப்பில் ஐ.பி.எல். கிரிக்கெட் பெட்டிங் நடந்தது தனக்கு தெரியாது” என்று கூறியுள்ளார். #IPL2019 #TusharArothe
Tags:    

Similar News