செய்திகள்

ஆஸ்திரேலிய அணியில் இருந்து ரிச்சர்ட்சன் விலகல்: அண்ட்ரிவ் டை சேர்ப்பு

Published On 2019-02-27 09:02 GMT   |   Update On 2019-02-27 09:02 GMT
காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் விலகியுள்ளார். #INDvAUS
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

2-வது மற்றும் கடைசி போட்டி இன்று பெங்களூருவில் இன்று நடக்கிறது. ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் இடம் பிடித்திருந்தார். முதல் போட்டிக்கான பயிற்சியின்போது இவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக ஆஸ்திரேலியா செல்கிறார். ஆகவே, ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக அண்ட்ரிவ் டை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News