செய்திகள்

2-வது டி20 கிரிக்கெட் போட்டி நடக்கும் பெங்களூர் மைதான கண்ணோட்டம்

Published On 2019-02-26 09:09 GMT   |   Update On 2019-02-26 09:09 GMT
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதன்முறையாக பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. #INDvAUS
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் 2012-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி முதல் 20 ஓவர் ஆட்டம் நடந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் இந்தியா 5 விக்கெட்டில் தோற்றது. கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி நடந்த போட்டியில் இந்திய அணி 75 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இந்த மைதானத்தில் இதுவரை ஐந்து 20 ஓவர் ஆட்டங்கள் நடந்து உள்ளன. இதில் இந்தியா 3 போட்டியில் ஆடி 2-ல் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி வங்காள தேசத்துக்கு எதிராக இந்த மைதானத்தில் விளையாடியுள்ளது. அதில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டில் வெற்றி பெற்றது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பெங்களூர் மைதானத்தில் முதல்முறையாக மோதுகின்றன.

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன் குவித்ததே அந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோராகும். இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2016-ம் ஆண்டு 9 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்ததே குறைந்தபட்ச ஸ்கோராகும்.

வெஸ்ட் இண்டீஸ் பிளெட்சர் இலங்கைக்கு எதிராக 84 ரன் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராகும். அதற்கு அடுத்தப்படியாக ரெய்னா 63, முகமது ஹபீஸ் 61 ரன்னும் எடுத்து இருந்தனர். சாஹல் இங்கிலாந்துக்கு எதிராக 25 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியதே இந்த மைதானத்தின் சிறந்த பந்து வீச்சாகும்.
Tags:    

Similar News