செய்திகள்

ஐபிஎல் வீரர்கள் ஏலம்- யுவராஜ் சிங்கின் அடிப்படை விலை ரூ.1கோடி

Published On 2018-12-06 06:27 GMT   |   Update On 2018-12-06 06:27 GMT
ஐபிஎல் வீரர்களின் ஏலத்துக்கான அடிப்படை விலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பஞ்சாப் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட யுவராஜ்சிங்கிற்கு ரூ.1 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #IPL2019 #IPLAuction #YuvrajSingh
புதுடெல்லி:

12-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 18-ந்தேதி ஜெய்ப்பூரில் நடக்கிறது.

பெரும்பாலான வீரர்கள் அணி நிர்வாகத்தால் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால் 70 வீரர்கள் மட்டுமே ஏலம் எடுக்கப்படுகின்றனர். இதில் 20 பேர் வெளிநாட்டு வீரர்கள், இந்திய வீரர்கள் 50 பேர் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள்.

இதற்காக மொத்தம் 232 வெளிநாட்டினர் உள்பட 1003 வீரர்கள் பதிவு செய்து உள்ளனர்.

ஐ.பி.எல். வீரர்களின் ஏலத்துக்கான அடிப்படை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட யுவராஜ்சிங்கின் அடிப்படை விலை ரூ.1 கோடியாகும். விர்த்திமான் சகா, அக்‌ஷர் படேல், முகமது ‌ஷமி, இஷாந்த்சர்மா ஆகியோரின் அடிப்படை விலையும் ரூ.1 கோடியாகும்.

இந்திய வீரர்களில் அதிகபட்சமாக ஜெயதேவ் உனட்கட்டுக்கு ரூ.1½ கோடி அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த முறை ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலை போனவர் ஆவார். தற்போது ராஜஸ்தான் அணி அவரை விடுவித்து இருந்தது. அவரை கடந்த ஐ.பி.எல். ஏலத்தில் ரூ.11½ கோடிக்கு எடுத்து இருந்தது.

எந்த ஒரு இந்திய வீரரும் ரூ.2 கோடி அடிப்படை விலைப்பட்டியலில் இடம் பெறவில்லை. ஷான்மார்ஷ், கோரி ஆண்டர்ச்ன, மேக்குல்லம் உள்பட 9 வெளிநாட்டு வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாகும். #IPL2019 #IPLAuction #YuvrajSingh
Tags:    

Similar News