செய்திகள்

ரஞ்சி டிராபி- டெல்லி வீரர் மிலிண்ட் குமார் சிக்கிம் அணிக்காக 261 ரன்கள் குவித்தார்

Published On 2018-11-02 10:04 GMT   |   Update On 2018-11-02 10:04 GMT
ரஞ்சி டிராபி தொடரில் மணிப்பூர் அணிக்கெதிரான ஆட்டத்திரல் சிக்கிம் வீரர் 261 ரன்கள் விளாச, அந்த அணி 372 ரன்கள் குவித்தது. #RanjiTrophy
இந்தியாவின் முன்னணி முதல்தர தொடரான ரஞ்சி டிராபி நேற்று தொடங்கியது. ஒரு ஆட்டத்தில் பிளேட் பிரிவில் இடம்பிடித்துள்ள சிக்கிம் - மணிப்பூர் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற மணிப்பூர் பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி சிக்கிம் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் சி டமாங்க் (0), பைசான் கான் (1), லமிச்சானே (8), பி டமாங்க் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் 13 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஐந்தாவது நபராக மிலிண்ட் குமார் களம் இறங்கினார். 27 வயதான மிலிண்ட் குமார் டெல்லி அணிக்காக விளையாடி வந்தார். டெல்லி அணியில் இடம்கிடைக்காததால் சிக்கிம் அணிக்கு மாறினார்.

அனுபவம் இல்லாத மணிப்பூர் அணியின் பந்து வீச்சை அபாரமாக எதிர்கொண்டு இரட்டை சதம் விளாசினார். அத்துடன் 261 ரன்கள் குவித்து வெளியேறினார். இவர் இரட்டை சதம் அடிக்க சிக்கிம் 372 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடக்கிய மணிப்பூர் 79 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.
Tags:    

Similar News