செய்திகள்

ஊக்க மருந்து விவகாரம் - ரஷியா மீதான தடை நீக்கம்: தடகள வீரர்கள் பங்கேற்க அனுமதி

Published On 2018-09-22 09:17 GMT   |   Update On 2018-09-22 09:17 GMT
ரஷிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் மீது விதிக்கப்பட்டு இருந்த தடையை சர்வதேச அமைப்பான வாடா நீக்கியுள்ளது. #Russiadrugsissue #Athletes

மாஸ்கோ:

ரஷிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் மீது விதிக்கப்பட்டு இருந்த தடையை சர்வதேச அமைப்பான ‘வாடா’ நீக்கியுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு ரஷிய தடகள வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தி இருந்தனர். அவர்களை இந்த விவகாரத்தில் சிக்காமல் காப்பாற்றுவதற்காக அந்நாட்டு ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் விளையாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் பல்வேறு வழிமுறைகளை கையாண்டதாக புகார்கள் எழுந்தன. ரஷிய வீரர்களின் சிறுநீர் மாதிரிகளை பரிசோதனை செய்ய உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பான ‘வாடா’வுக்கு அனுமதி அளிக்கவில்லை.

இதையடுத்து ‘வாடா’ விசாரணை நடத்தி ரஷியாவின் ஊக்க மருந்து தடுப்பு அமைப்புக்கு தடை விதித்தது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக ரஷிய தடகள வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.


இந்த நிலையில் ‘வாடா’ செயற்குழு கூட்டத்தில் ரஷிய ஊக்க மருந்து ஆணையம் மீதான தடையை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

தடை நீக்கப்பட்டதால் ரஷிய தடகள வீரர்கள் இனி சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியும். ‘வாடா’ வின் இந்த முடிவை ரஷிய அரசு வரவேற்றுள்ளது. #Russiadrugsissue #Athletes

Tags:    

Similar News