செய்திகள்

அனுபவத்தில் இந்தியா சிறந்தது, மன ரீதியில் நாங்கள் - பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அஹமது

Published On 2018-08-16 09:57 GMT   |   Update On 2018-08-16 09:57 GMT
அனுபவத்தில் இந்தியா சிறந்தது, மனரீதியில் நாங்கள் இந்தியாவை விட முன்னணியில் இருக்கிறோம் என்று பாகிஸ்தான் கேப்டன் தெரிவித்துள்ளார். #INDvPAK
ஆசியக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி குறித்து இப்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டது. இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு இதில்தான் இரண்டு அணிகளும் மோத உள்ளது.

இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பிராஸ் அஹமது கூறுகையில் ‘‘விராட் கோலி தலைமையிலான இந்திய அணி எங்களை விட அனுபவத்தில் சிறந்த அணி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு இரண்டு அணிகளும் முதன்முறையாக மோத இருப்பதால் சிறந்த போட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்.



மனரீதியில் நாங்கள் இந்தியாவை விட சிறந்த அணி. ஏனென்றால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எங்களுடைய சொந்த மைதானமாக இருக்கிறது. இங்குள்ள சூழ்நிலையை நாங்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வோம். ஆசியக் கோப்பை அட்டவணைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பது குறித்து எனக்கு ஏதும் தெரியாது’’ என்றார்.
Tags:    

Similar News