செய்திகள்

கைவிரல் காயத்திற்கு அறுவை சிகிக்சை- ஷாகிப் அல் ஹசன் ஆசிய போட்டியில் விளையாடுவது சந்தேகம்

Published On 2018-08-09 11:06 GMT   |   Update On 2018-08-09 11:06 GMT
ஷாகிப் அல் ஹசன் கைவிரல் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் ஆசிய கோப்பையில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. #ShakibAlHasan
வங்காள தேச கிரிக்கெட் அணியின் கேப்டனும், ஆல்ரவுண்டரும் ஆன ஷாகிப் அல் ஹசன் கடந்த ஜனவரி மாதம் சொந்த மண்ணில் இலங்கையை எதிர்த்து ஒருநாள் தொடரில் விளையாடினார். அப்போது இடது கை சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது.

இதனால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் இருந்து விலகினார். அதன்பின் ஆஸ்திரேலியா சென்று சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் வற்புறுத்தினார்கள்.



ஆனால் ஷாகிப் அல் ஹசன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை. சிகிச்சைக்குப்பின் இலங்கையில் நடைபெற்ற நிதாஹா் டிராபியில் விளையாடினால். கடந்த சில வாரங்களாக வங்காள தேசம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.

கடைசியாக டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அப்போது விரலில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார். அறுவை சிகிச்சை மேற்கொண்டால் ஐக்கிய அரவு எமிரேட்சில் அடுத்த மாதம் நடைபெறும் ஆசியக் கோப்பையில் பங்கேற்பது சந்தேகம் எனக்கூறப்படுகிறது.
Tags:    

Similar News