செய்திகள்

டெஸ்ட் தொடரில் ஐபிஎல் நட்பிற்கு இடமில்லை- ஜோஸ் பட்லர் திட்டவட்டம்

Published On 2018-07-29 11:21 GMT   |   Update On 2018-07-29 11:21 GMT
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின்போது ஐபிஎல் டி20 லீக்கின் போது ஏற்பட்ட நட்பிற்கு சிறுதுகூட இடமில்லை என் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். #ENGvIND
இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பராக திகழ்பவர் ஜோஸ் பட்லர். இவர் அதிக அளவில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது கிடையாது. இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதித்து.

கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடதில் அசத்தி வருகிறார். ஐபிஎல் தொடரில் விளையாடியதன் மூலம் இவரது ஆட்டம் மெருகேறியது. இதனால் ஒருநாள் போட்டியில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் 2018 ஐபிஎல் சீசனில் இடம்பிடித்தனர்.

ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். கடைசியாக விளையாடி பெரும்பாலான ஆட்டத்தில் அரைசதம் அடித்தார். இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரகானே இடம்பிடித்திருந்தார். அதேபோல் மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பிடித்திருந்தனர். இவர்களுக்கு இந்திய அணி வீரர்களுடன் நல்ல நட்புணர்வு உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பெரும்பாலானான பழகிய முகங்கள் இருப்பதால் அவர்களை இங்கிலாந்து வீரர்கள் எப்படி எதிர்ப்பாகர்கள் என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் ஐபில் தொடரின் நட்பிற்கு டெஸ்ட் போட்டியில் இடமில்லை. நாங்கள் வெற்றி பெறுவது மட்டுமே முக்கியமானது என்று ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து ஜோஸ் பட்லர் கூறுகையில் ‘‘இந்திய அணியில் உள்ள சில வீரர்களுடன் நான் விளையாடிள்ளேன். பொதுவாக அவர்களுடன் நட்பு இருக்கலாம். ஆனால், விளையாடுவதற்காக களம் இறங்கிவிட்டால், அவர்கள் மறந்துவிடுவார்கள். ஒவ்வொருவரும் போட்டியின் மீதுதான் கவனம் செலுத்துவார்கள்.

ஐபிஎல் தொடரின்போது ஆடுகளத்தில் மட்டுமல்ல, பயிற்சி நாட்களிலும், சாப்பாடு நேரத்திலும் ஒன்றாக நேரத்தை செலவிடுவோம். மொயின் அலி, சாஹல் மற்றும் விராட் கோலியுடன் ஆர்சிபி அணிக்காக விளையாடியுள்ளார். அவர்களுக்குள் நல்ல நட்பு இருந்ததை நான் பார்த்துள்ளளேன். நான் மும்பை அணியில் ஹர்திக் பாண்டியாவுடன் விளையாடியுள்ளேன். ஆகவே, அவருடன் நான் பேசி வருகிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News