செய்திகள்

32 மாதங்களுக்குப் பிறகு இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்தார் சுரேஷ் ரெய்னா

Published On 2018-07-12 12:06 GMT   |   Update On 2018-07-12 12:06 GMT
அதிரடி பேட்ஸ்மேன் ஆன சுரேஷ் ரெய்னா 32 மாதங்கள் கழித்து இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார். #ENGvIND #Raina
இந்திய அணியின் முன்னணி இடது கை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா. 31 வயதான இவர் 2005-ல் ஒருநாள் போட்டியில் முதன்முதலாக இந்திய அணியில் அறிமுகமானார். சுழற்பந்து வீசுவதுடன் தனது அதிரடி பேட்டிங்கால் குறுகிய காலக்கட்டத்திலேயே சிறந்த பேட்ஸ்மேனாக வளர்ச்சியடைந்தார். டி20 போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

திடீரென இவரது ஆட்டத்தில் சறுக்கல் ஏற்பட்டது. இதனால் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம்பெறவில்லை.



அதன்பின் தீவிர பயிற்சிக்குப்பின் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இடம்பிடித்தார். இன்று நடைபெற்று வரும் ஒருநாள் போட்டியில் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைத்துள்ளது.

இதன்மூலம் 32 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் இடம்பிடித்துள்ளார். இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்கிடைக்க வாய்ப்புள்ளது. சுரேஷ் ரெய்னா 223 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5 சதத்துடன் 5568 ரன்கள் அடித்துள்ளார்.



அதேபோல் கேஎல் ராகுல் 10 மாதங்கள் கழித்து அணியில் இடம்பிடித்துள்ளார். சித்தார்த் கவுல் அறிமுகமாகியுள்ளார்.
Tags:    

Similar News