செய்திகள்

அறிமுக டெஸ்டில் இப்படியும் ஒரு சாதனை- ரஷித் கானுக்கு வந்த சோதனை

Published On 2018-06-17 11:05 GMT   |   Update On 2018-06-17 11:05 GMT
அறிமுக டெஸ்டில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் மாயாஜால பந்து வீச்சாளர் ரஷித் கான். #INDvAFG
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் கடந்த 14-ந்தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இரண்டே நாட்களில் முடிந்த இந்த டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா தவான் (107), முரளி விஜய் (105) ஆகியோரின் சதத்தால் இந்தியா 474 ரன்கள் குவித்தது.

டி20 போட்டியில் மாயாஜால பந்து வீச்சால் முன்னணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்திய ரஷித் கானால் ‘ரெட்’ பந்தில் சிறப்பாக பந்து வீச முடியவில்லை. அவருடன் முஜீப் உர் ரஹ்மானும் திணறினார். முஜீப் உர் ரஹ்மான் அறிமுக போட்டியில் 15 ஓவரில் 75 ரன்கள் விட்டுக்கொடுது ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். இதில் ஒரு மெய்டன் ஓவர்தான்.



ரஷித் கான் 34.5 ஓவர்கள் வீசி 154 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். 35 ஓவரில் இரண்டு மெய்டன் ஓவர்கள் மட்டுமே வீசினார்.

அறிமுக போட்டியில் 154 ரன்கள் விட்டுக்கொடுத்ததன் மூலம் அறிமுக போட்டியிலேயே அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் 1952-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் வீரர் அமிர் எலாஹி 134 ரன்கள் விட்டுக்கொடுத்ததே அதிக ரன்களாக இருந்தது.
Tags:    

Similar News