செய்திகள்

பிரேசிலின் முன்னணி வீரர்கள் கலந்து கொண்ட பயிற்சியில் நெய்மர் இடம் பெறவில்லை

Published On 2018-06-01 09:02 GMT   |   Update On 2018-06-01 09:02 GMT
உலகக் கோப்பைக்கான பிரேசிலின் முன்னணி வீரர்கள் கலந்து கொண்ட பயிற்சி ஆட்டத்தில் கேப்டன் நெய்மர் கலந்து கொள்ளவில்லை. #WorldCup2018
உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் வருகிற 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. பிரேசில் அணி கேப்டனும், தலைசிறந்த வீரரும் ஆன நெய்மர் காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார்.

பிரேசில் நாட்டின் தேசிய அகாடமியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீரர்கள் பயிற்சியை முடித்துக் கொண்டனர். அப்போது 100 சதவீதம் காயம் குணமடையவில்லை என்று நெய்மர் கூறியிருந்தார்.

அதன்பின் பிரேசில் அணி லண்டன் வந்தடைந்துள்ளது. பிரேசில் அணி தனது பயிற்சி ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை லிவர்பூலில் குரோசியாகவை எதிர்கொள்கிறது. இதில் விளையாடும் முன்னணி வீரர்கள் நேற்று பயிற்சி மேற்கொண்டனர். அதில் நெய்மர் இடம்பெறவில்லை. இதனால் ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் அவர் கலந்து கொள்வாரா? என்பது தெரியவில்லை. பிலிப்பே கவுன்ட்டினோ, கேப்ரியல் ஜீசஸ் ஆகியோர் ஸ்டிரைக்கராக களம் இறங்கினார்கள்.



முழங்கால் காயம் காரணமாக ரெனாடோ ஆகஸ்டோ குரோசியாவிற்கு எதிரான ஆட்டத்தில் களம் இறங்கமாட்டார் என்று பிரேசில் பயிற்சியாளர் கூறியுள்ளார். ஜூன் 8-ந்தேதி வரை பிரேசில் அணி டோட்டன்ஹாம் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொள்ளும். உலகக் கோப்பைக்கு முன்பு கடைசியாக ஜூன் 10-ந்தேதி ஆஸ்திரேயாவை பிரேசில் எதிர்கொள்கிறது.
Tags:    

Similar News