செய்திகள்

காமன்வெல்த் போட்டிக்கு வந்த 50 பேரை காணவில்லை- வலைவீசி தேடுகிறது ஆஸ்திரேலியா

Published On 2018-05-22 12:37 GMT   |   Update On 2018-05-22 12:37 GMT
காமன்வெல்த் போட்டிக்காக கோல்டு கோஸ்ட் சென்றவர்களில் 50 பேரை காணவில்லை என்றும், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் கடந்த மாதம் 4-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை காமன்வெல்த் கேம்ஸ் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 6600 வீரர்கள் மற்றும் அணி பயிற்சியாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இவர்கள் தொடர் முடிந்தவுடன் சொந்த நாடு திரும்பினார்கள். ஆனால், சிலர் இன்னும் சொந்த நாடு திரும்பவில்லை. அவர்கள் ஆஸ்திரேலியாவில் சுற்றிக் கொண்டிருக்கலாம். அதேபோல் சிலர் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடை கோரிக்கை விடுத்துள்ளனர்.



இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு விவகாரத்துறை மந்திரி டுட்டோன் கூறுகையில் ‘‘கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டிக்கு வந்தவர்களில் 190 பேர் அகதிகள் விசா கேட்டுள்ளார்கள். 50 பேரை காணவில்லை. அவர்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது. அவர்களை கண்டுபிடித்து, குடியேற்ற தடுப்புக்காவலில் வைத்து, நாடு கடத்தப்படுவார்கள்’’ என்றார்.

காமன்வெல்த் போட்டிக்கு செல்பவர்கள் மாயமாவது இது புதிதல்ல. 2006-ம் அண்டு மெல்போர்ன்  2002 மான்செஸ்டர், 2014 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும் டஜன் கணக்கில் மாயமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ustralia Searching for 50 Athletes Officials Missing After Commonwealth Games
Tags:    

Similar News