செய்திகள்

ஐபிஎல் - ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்

Published On 2018-04-22 16:43 GMT   |   Update On 2018-04-22 16:43 GMT
ஐபிஎல் 20 ஓவர் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி 167 ரன்கள் சேர்த்துள்ளது. #IPL2018 #MIvRR
ஜெய்ப்பூர்:

ஐ.பி.எல். தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி துவக்க வீரர்களாக சூர்ய குமார் யாதவ், எவின் லீவிஸ் களமிறங்கினர். குல்கர்னி வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் லீவிஸ் விக்கெட்டை எடுத்தார். அடுத்து இஷான் கிஷான், சூர்ய குமார் யாதவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர். இவர்கள் இருவரையும் பிரிக்க முடியாமல் எதிரணியினர் திணறினர்.



மும்பை அணி 130 ரன்கள் எடுத்தபோது இஷான் கிஷான் அவுட்டாகி வெளியேறிய நிலையில் அடுத்த ஓவரிலேயே சூர்ய குமார் யாதவும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா உள்பட மும்பை வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.

மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக சூர்ய குமார் யாதவ் 72, இஷான் கிஷான் 58 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோப்ரா ஆர்சர் 3 விக்கெட்டும், குல்கர்னி 2 விக்கெட்டும் எத்தனர். இறுதியில் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டு இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது.

பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. #IPL2018 #MIvRR
Tags:    

Similar News