செய்திகள்

முதுகை பயன்படுத்த வேண்டியதில்லை- கை அந்த வேலையைச் செய்யும்- டோனி பளிச் பதில்

Published On 2018-04-16 12:46 GMT   |   Update On 2018-04-16 12:46 GMT
பந்தை தூக்கி அடிக்க என்னுடைய முதுகை பயன்படுத்த தேவையில்லை. என்னுடைய கையே அந்த வேலையைச் செய்யும் என டோனி குறிப்பிட்டுள்ளார். #MSDhoni
சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று சண்டிகரில் நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது. பின்னர் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. சென்னை அணி 6.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்திருக்கும்போது டோனி களம் இறங்கினார். அப்போது 13.2 ஓவரில் 142 ரன்கள் தேவைப்பட்டது.

16-வது ஓவர் முடியும் வரை டோனி நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தார். இதற்கிடையே டோனியின் முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டது. என்றாலும் அணியின் வெற்றிக்காக வலியை பொறுட்படுத்தாமல் ஆட்டத்தை தொடர்ந்தார்.

18-வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். 19-வது ஓவரை டை வீசினார். இந்த ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். இதனால் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. டோனி ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் மட்டுமே விளாச 4  ரன்னில் தோல்வியை சந்தித்தது. 44 பந்தில் 6 பவுண்டரி, 5 சிக்சர்களடன் 79 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.



முதுகில் வலி இருந்தபோதிலும் பந்தை தூக்கி அடிக்கும் ஷாட்டுகள் (lofted shots) எப்படி ஆடினீர்கள் என்று கேள்வி கேட்கபட்டது. இதற்கு டோனி பதிலளிக்கையில் ‘‘எனது முதுகு பக்கத்தில் அதிக வலி இருந்தது. ஆனால், கடவுள் எனக்கு ஏராளமான பவர் கொடுத்துள்ளார். என்னுடைய முதுகு பகுதியை அதிக அளவில் பயன்படுத்த தேவையில்லை. எனது கைகளால் அந்த வேலையை செய்ய முடியும்’’ என்றார்.
Tags:    

Similar News