செய்திகள்

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதில் ரியல் மாட்ரிட் - பேயர்ன் முனிச், ரோமா - லிவர்பூல் பலப்பரீட்சை

Published On 2018-04-13 12:54 GMT   |   Update On 2018-04-13 12:54 GMT
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து அரையிறுதியில் ரியல் மாட்ரிட் பேயர்ன் முனிச்சையும், ரோமா லிவர்பூல் அணியையும் எதிர்கொள்கிறது. #UCL #RealMadrid
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இரண்டு லெக் முடிவில் பார்சிலோனாவை ரோமா அணியும், மான்செஸ்டர் சிட்டி அணியை லிவர்பூல் அணியும், யுவான்டசை ரியல் மாட்ரிட் அணியும், செவியாவை பேயர்ன் முனிச் அணியும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின.



அரையிறுதி போட்டியில் யார் யாருடன் மோதுவது என்பதை தேர்வு செய்யும் குலுக்கல் முறை இன்று நடைபெற்றது. இந்த குலுக்கலின் முடிவில் ரியல் மாட்ரிட் - பேயர்ன் முனிச், ரோமா - லிவர்பூல் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதல் லெக் 24-ந்தேதியும், 2-வது லெக் மே 1-ந்தேதியும் நடக்கிறது. இறுதிப் போட்டி 26-ந்தேதி நடக்கிறது.
Tags:    

Similar News