செய்திகள்

தென்ஆப்பிரிக்கா பேட்டிங்- ஸ்டார்க் இல்லை- பேர்ன்ஸ், ரென்ஷா ஹேண்ட்ஸ்காம்ப் சேர்ப்பு

Published On 2018-03-30 08:39 GMT   |   Update On 2018-03-30 08:39 GMT
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டெஸ்டில் ஸ்டார்க் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக புதுமுக வீரர் சேயர்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். #SAvAUS
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலியா அணியில் வார்னர், பான்கிராப்ட், ஸ்மித் ஆகியோருக்குப் பதிலாக ரென்ஷா, ஜோ பேர்ன்ஸ் மற்றும் ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக புதுமுக வீரர் சேயர்ஸ் இடம்பிடித்துள்ளார்.



தென்ஆப்பிரிக்கா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இந்த டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ தொடரைக் கைப்பற்றி சாதனைப் படைக்கும். #SAvAUS
Tags:    

Similar News