செய்திகள்

ஐ.சி.சி. உலக அணிக்கு மார்கன் கேப்டன்

Published On 2018-03-23 06:39 GMT   |   Update On 2018-03-23 06:39 GMT
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாட இருக்கும் ஐ.சி.சி. உலக லெவன் அணிக்கு இயன் மார்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.சி.சி. உலக லெவன் அணி- வெஸ்ட்இண்டீஸ் மோதும் 20 ஓவர் காட்சி கிரிக்கெட் போட்டி வருகிற 31-ந்தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

கரிபியன் தீவில் இர்மா, மரியா ஆகிய பகுதியில் புயலால் கடந்த ஆண்டு தாக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட இப்பகுதிகளுக்கு நிதி திரட்டுவதற்காக இந்த 20 ஓவர் போட்டி நடத்தப்படுகிறது.

ஐ.சி.சி. உலக லெவன் அணிக்கு இங்கிலாந்தின் ஒருநாள் போட்டி கேப்டனான இயன் மார்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News