செய்திகள்

ஐபிஎல் 2018- மும்பை இந்தியன்ஸ் அணியில் மிட்செல் மெக்கிளெனகன் சேர்ப்பு

Published On 2018-03-19 09:27 GMT   |   Update On 2018-03-19 10:30 GMT
மும்பை இந்தியன்ஸ் அணியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மெக்கிளெனகன் சேர்க்கப்பட்டுள்ளார். #IPL2018 #MI
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

மும்பை அணி ஆஸ்திரேலியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் பெரேன்டர்ஃப்-ஐ 1.5 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. தற்போது அவர் முதுகு வலியால் அவதிப்பட்டு வருவதால் ஐபிஎல் தொடரில் விளையாட உடற்தகுதி பெறவில்லை.

இதனால் பெரேன்டர்ஃபிற்குப் பதிலாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மெக்கிளெனகனை அணியில் சேர்த்துள்ளது. இதற்கு ஐபிஎல் தொடரின் டெக்னிக்கல் கமிட்டி அனுமதி வழங்கியுள்ளது. மெக்கிளெனகன் ஏற்கனவே ஐபிஎல் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்திருந்தார். ஜனவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில் அவரை எந்த அணியும் எடுக்கவில்லை. இந்நிலையில் மும்பை இந்தியன் அடிப்படை விலையான 1 கோடி ரூபாய் கொடுத்து எடுத்துள்ளது.



கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்ல மெக்கிளெனகன் முக்கிய காரணமாக இருந்தார். இவர் 14 போட்டியில் 19  விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார். 31 வயதாகும் மெக்கிளெனகன் ஐபிஎல் தொடரில் 40 போட்டிகளில் பங்கேற்று 54 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். #IPL2018 #MI

Tags:    

Similar News