செய்திகள்

ரபாடா ஐந்து பந்து வீச்சாளர்களுக்கு இணையானவர் - நிதினி

Published On 2018-03-17 13:12 GMT   |   Update On 2018-03-17 13:12 GMT
ரபாடா கேப்டவுன் டெஸ்டில் இடம்பெறாவிட்டால் தென்ஆப்பிரிக்கா 5 வேகப்பந்து வீச்சாளர்களை இழப்பதற்கு சமமானது என நிதினி தெரிவித்துள்ளார். #SAvAUS
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை ருசித்துள்ளது.

2-வது போட்டியின்போது தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித்துடன் மோதலில் ஈடுபட்டார். இதனால் இரண்டு டெஸ்டில் விளையாட அவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை எதிர்த்து ரபாடா அப்பீல் செய்துள்ளார். இதன்மீதான விசாரணை திங்கட்கிழமை தொடங்குகிறது.

இந்த விசாரணையில் அவரது தண்டனை குறைக்கப்பட்டால் கேப்டவுன் டெஸ்டில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். ஒருவேளை ரபாடா தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பெறவில்லை என்றால், அது ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களை இழந்ததற்கு சமம் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நிதினி கூறியுள்ளார்.

ரபாடா தடை குறித்து ரபாடா கூறுகையில் ‘‘ரபாடா எங்கள் மண்ணின் மைந்தன். நாங்கள் அவரை அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டியில் இழந்தால், அது அணிக்கு மிகப்பெரிய இடைவெளியாகும். அவரை இழப்பது ஐந்து பந்து வீச்சாளர்களை இழந்ததற்கு சமம்.



போர்ட் எலிசபெத்தில் 11 விக்கெட்டுக்கள் சாய்த்து்ளளார். இது பெரிய இடைவெளியாக இருக்கும். இதை ஐந்து பந்து வீச்சாளர்களை கொண்டுதான் நிரப்ப முடியும். அவர் அணியில் இல்லாவிடில், ஒட்டுமொத்த கப்பலும் நீரில் மூழ்கி கொண்டிருப்பது போன்றது. யாராலும் அந்த கப்பல் கவிழ்வதை தடுத்து மீண்டும் பயணம் செய்ய வைக்க இயலாது. வேகப்பந்து வீச்சின் தலைவர் அவர்’’ என்றார். #SAvAUS #Rabada
Tags:    

Similar News