செய்திகள்

இரானி கோப்பையில் 800 ரன்கள் குவித்து 28 வருட சாதனையை உடைத்தது விதர்பா

Published On 2018-03-17 10:03 GMT   |   Update On 2018-03-17 10:03 GMT
இரானி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கெதிராக 800 ரன்கள் குவித்து விதர்பா சாதனைப் படைத்துள்ளது. #IraniCup2018
ரஞ்சி டிராபி சாம்பியன் விதர்பாவிற்கும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கும் இடையிலான இரானி கோப்பை ஆட்டம் நாக்பூரில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த விதர்பா அணி நான்காவது நாள் காலை வரை முதல் இன்னிங்சை விளையாடியது. அந்த அணியின் வாசிம் ஜாபர் (286), கணேஷ் சதிஷ் (120), வான்கடே (157 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 226.3 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 800 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.



இதன்மூலம் இரானி கோப்பை போட்டியில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற பெருமையை விதர்பா பெற்றுள்ளார். இதற்கு முன் 1990-ம் ஆண்டு ரெஸ்ட் ஆப் இந்தியா அணி பெங்காலுக்கு எதிராக 737 ரன்கள் குவித்திருந்தது. இதுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

சுமார் 28 வருடங்கள் கழித்து விதர்பா அணி 800 ரன்கள் குவித்து அந்த சாதனையை முறியடித்துள்ளது. #IraniCup2018 #IraniCup
Tags:    

Similar News