செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் கிரேக் ஓவர்டன்

Published On 2018-02-19 12:42 GMT   |   Update On 2018-02-19 12:42 GMT
நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் கிரேக் ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார். #NZvENG
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப் போட்டி நாளைமறுநாள் (21-ந்தேதி) நடக்கிறது. அதன்பின் நியூசிலாந்து - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 25-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அணியில் இடம் பிடித்திருந்த லியாம் பிளங்கெட் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக கிரேக் ஓவர்டன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.



23 வயதாகும் ஓவர்டன் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் தொடரின்போது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 3-வது டெஸ்டில் பேட்டிங் செய்யும்போது காயம் ஏற்பட்டது. இதனால் ஆஷஸ் தொடரில் இருந்து விலகினார்.

டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஓவர்டன் இதுவரை ஒருநாள் போட்டியில் களம் இறங்கியதில்லை. 2015-ம் ஆண்டு ஓவர்டன் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால் ஆடும் லெவனில் இடம்கிடைக்கவில்லை. அதேபோல் கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 அணியில் இடம்பிடித்திருந்தார். அப்போது களம் இறக்கப்படவில்லை. #NZvENG
Tags:    

Similar News