செய்திகள்

இந்திய வீரர்களுக்கு உணவு வழங்காததால் சமையல்காரரை நீக்கியது தென்ஆப்பிரிக்கா

Published On 2018-02-18 07:29 GMT   |   Update On 2018-02-18 07:29 GMT
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு இந்திய உணவு வழங்காததால் சமையல்காரர் நீக்கப்பட்டு, இந்திய உணவு தயாரிக்கும் ஹோட்டலை ஏற்பாடு செய்தது தென்ஆப்பிரிக்கா. #SAvIND
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதில் இநதியா 5-1 எனத் தொடரை கைப்பற்றியுள்ளது. 6-வது மற்றும் கடைசி போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் அங்கு பரிமாறப்படும் உணவு வகைகளால் அதிருப்தி அடைந்தனர்.

போட்டியின்போதும், பயிற்சியில் ஈடுபட்ட போதும் இரு நாட்டு வீரர்களுக்கும் உணவு வழங்க சமையல்காரர் பணியமர்த்தப்பட்டிருந்தார். இவர் இந்திய வீரர்களுக்கு உணவு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இந்திய வீரர்கள் கேட்ட இந்திய உணவுகளை வழங்க மறுத்துவிட்டார். இதனால் இந்திய வீரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆகவே, அந்த சமையல்காரர் நீக்கப்பட்டு, இந்திய உணவு கிடைக்கும் ரெஸ்டாரண்டில் இருந்து சமையல்காரர் ஒருவர் உணவு வழங்க பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இன்று டி20 நடக்கும் ஜோகன்னஸ்பர்க் மைதானத்திலும் இந்திய உணவு வகைகள் தயார் செய்யும் ரெஸ்டாரண்டில் இருந்து ஒருவர் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News