செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து திணறல்

Published On 2018-01-26 07:56 GMT   |   Update On 2018-01-26 07:56 GMT
அடிலெய்டில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 44.5 ஓவருக்கு 196 ரன்களில் ஆல்-அவுட்டானது. #AUSvENG
அடிலெய்டு:

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டு நகரில் நடைபெற்று வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவின் அபார பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. அந்த அணி 8 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்தது. ஜேசன் ராய், ஜோடூப், பேரிஸ்டோவ், ஜோஸ் பட்லரி ஆகிய 4 பேர் ரன் எதுவும் எடுக்காமல் ‘டக்’ அவுட் ஆனார்கள்.

இதையடுத்து, களமிறங்கிய கிரிஸ் வோக்ஸ் அபாரமாக விளையாடி அணிக்கு 78 ரன்கள் பெற்று தந்தார். மோர்கன் மற்றும் மோயன் அலி தலா 33 ரன்கள் எடுத்தனர். டாம் கூரன் 35 ரன்களும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இங்கிலாந்து அணி 44.5 ஓவருக்கு 196 ரன்கள் எடுத்த நிலையில் ஆல்-அவுட்டானது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் களத்தில் உள்ளனர்.

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி ஏற்கனேவே தொடரை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. #AUSvENG
Tags:    

Similar News