செய்திகள்

U19 உலகக்கோப்பையில் 8 விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலியா வீரர் சாதனை

Published On 2018-01-23 12:24 GMT   |   Update On 2018-01-23 12:24 GMT
நியூசிலாந்தில் நடைபெற்று வரும் U19 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியா வீரர் 8 விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். #U19CWC #AUS19vENGU19
U19  உலகக்கோப்பை நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற் காலிறுதியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 33.3 ஓவர்கள் மட்டுமே விளையாடி 127 ரன்னில் சுருண்டது. 3-வது வீரராக களம் இறங்கிய கேப்டன் சங்கா அதிகபட்சமாக 58 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணி சார்பில் பம்பர், பென்னிங்டன், ஜேக்ஸ் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் டாம் பான்டான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மறுமுனையில் உள்ள வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 7.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் இங்கிலாந்து எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.



ஆனால், 8-வது ஓவரை ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் போப் வீசினார். இவரது சுழலில் இங்கிலாந்து சிக்கி வீழ்ந்தது. 8-வது ஓவரின் முதல் பந்தில் பேங்க்ஸ் 3 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்த பந்தில் ப்ரூக் டக்அவுட் ஆனார். போப் வீசிய அடுத்த ஓவரில் ஜேக்ஸ் 1 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் விளையாடிய பான்டான் 58 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டையும் போப்தான் வீழ்த்தினார். அதன்பின் இங்கிலாந்து விக்கெட்டுக்களை வரிசையாக வீழ்த்தினார்.

போப்பின் அபார பந்து வீச்சால் இங்கிலாந்து 23.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 96 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போப் 9.4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதன்மூலம் U19  உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற பெயரை போப் பெற்றுள்ளார்.

U19  கிரிக்கெட்டில் இந்திய வீரர் இர்பான் பதான் 9 விக்கெட்டுக்கள வீழ்த்தியதே உலக சாதனையைாக இருந்து வருகிறது. #U19CWC #AUS19vENGU19 #LloydPope
Tags:    

Similar News