செய்திகள்

ஐபிஎல் ஏலம்: 1122 பேர் விண்ணப்பம்- 578 பேர் தேர்வு

Published On 2018-01-20 15:32 GMT   |   Update On 2018-01-20 15:32 GMT
ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ள 1122 பேர் விண்ணப்பம் செய்திருந்தார்கள். இதில் 578 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். #IPLAuction #IPL2018
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 11-வது சீசன் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான வீரர்களின் ஏலம் வரும் 27-ந்தேதி மற்றும் 28-ந்தேதிகளில் பெங்களூருவில் நடக்கிறது.

ஐபில் ஏலத்தில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் உள்பட 1122 பேர் விண்ணப்பம் செய்திருந்தார்கள். அதில் 578 பேர் ஏலத்தில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அஸ்வின், வெயின் பிராவோ, கிறிஸ் கெய்ல், பொல்லார்டு, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் போன்றோர் ஏலம் மூலம் எடுக்க இருக்கிறார்கள்.

மொத்தம் 36 பேரின் அடிப்படை விலை 2 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 13 பேர் இந்திய வீரர்கள். 23 பேர் வெளிநாட்டு வீரர்கள்.

32 பேரின் அடிப்படை விலை 1.5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 31 பேரின் அடிப்படை விலை 1 கோடி ரூபாயாகவும், 23 பேரின் அடிப்படை விலை 75 லட்சம் ரூபாயாகவும், 122 பேரின் அடிப்படை விலை 50 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

14 வீரர்களின் அடிப்படை விலை 40 லட்சமாகவும், 17 பேரின் விலை 30 லட்சமாகவும், 303 பேரின் விலை 20 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபில் தொடரில் பங்கேற்க உள்ள 8 அணிகள் அதிகபட்சமாக 25 வீரர்களை ஏலம் எடுக்கலாம்.  #IPLAuction #IPL2018 #CSK #RR #RCB #DD #KKR #MI #SRH #KXIP
Tags:    

Similar News