செய்திகள்

U19 உலகக்கோப்பை: காலிறுதியில் இந்தியா - வங்காள தேசம், இங்கிலாந்து-ஆஸி. பலப்பரீட்சை

Published On 2018-01-20 10:45 GMT   |   Update On 2018-01-20 10:45 GMT
U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதியில் இந்தியா - வங்காள தேசம், இங்கிலாந்து - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா பலப்பரீட்சை நடத்துகின்றன. #U19CWC
நியூசிலாந்தில் U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்ற 16 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். இதனடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

லீக் போட்டிகள் இன்றுடன் முடிவடைந்தது. ‘ஏ’ பிரிவில் நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ‘பி’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ‘சி’ பிரிவில் இங்கிலாந்து, பெங்களூரு, ‘டி’ பிரிவில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தது.

இந்த 8 அணிகளுக்கு இடையிலான காலிறுக்கான போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டது. இதில் முதல் காலிறுதி போட்டி வருகிற 23-ந்தேதி நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பலப்ரீட்சை நடத்துகின்றன.



2-வது காலிறுதி 24-ந்தேதி நடக்கிறது. இதில் பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 3-வது காலிறுதி 25-ந்தேதி நடக்கிறது. இதில் நியூசிலாந்து ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. 4-வது காலிறுதி 26-ந்தேதி நடக்கிறது. இதில் இந்தியா வங்காள தேசத்தை சந்திக்கிறது.

இதற்கிடையில் 9-வது இடத்திற்கான போட்டியும் நடைபெற இருக்கிறது. #U19CWC #futurestars
Tags:    

Similar News