செய்திகள்

U19 உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

Published On 2018-01-13 12:35 GMT   |   Update On 2018-01-13 12:35 GMT
U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடக்க நாளில் பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் வீழ்த்தி அசத்தியது. நியசிலாந்து, வங்காள சேதம், ஜிம்பாப்வே அணிகளும் வெற்றி பெற்றன. #U19cwc #U19worldcup #UWC
U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் இன்று தொடங்கியது. இன்றைய தினம் நான்கு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முகமது ஷெய்த் ஆலம், ரோகைல் நசிர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மொகமது ஷெய்த் ஆலம் ரன்ஏதும் எடுக்காமல் முதல் ஓவரின் 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அமாத் ஆலம் 1 ரன்னில் வெளியேறினார். இருந்தாலும் ரோகைல் நசிர் சிறப்பாக விளையாடி 81 ரன்கள் சேர்த்தார். இவரது ஆட்டத்தால் பாகிஸ்தான் 47.4 ஓவரில் 188 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.



பின்னர் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 31 ரன்னும், 3-வது வீரர் இக்ராம் அலி ஹில் 46 ரன்னும் எடுத்து வெற்றிக்கான அடித்தளம் அமைத்தனர்.

அதன்பின் வந்த தர்விஸ் ரசூலி அவுட்டாகாமல் 78 பந்தில் 76 ரன்கள் குவிக்க 47.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

மற்ற போட்டிகளில் பப்பு நியூ கினியாவிற்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே 10 விக்கெட் வித்தியாசத்திலும், நமிபியாவிற்கு எதிரான ஆட்டத்தில் வங்காள தேசம் 87 ரன்கள் வித்தியாசத்திலும், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. #U19cwc #U19worldcup #UWC
Tags:    

Similar News