செய்திகள்

விராட் கோலி பெரிய அளவில் மாற்றம் கொண்டுவர வேண்டியதில்லை: கங்குலி

Published On 2018-01-12 12:35 GMT   |   Update On 2018-01-12 12:35 GMT
கேப் டவுன் தோல்வியால் இந்திய அணியில் பெரிய மாற்றம் கொண்டு வர வேண்டிய தேவையில்லை என கங்குலி கூறியுள்ளார். #SAvIND #ViratKohli #SouravGanguly
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் பேட்டிங் மிகவும் மோசமான இருந்தது. தொடக்க வீரர் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை அணியில் சேர்த்தது குறித்து விமர்சனம் எழுப்பப்பட்டது. அதற்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி பதில் அளித்தார்.

இந்நிலையில் நாளை 2-வது டெஸ்ட் செஞ்சூரியனில் தொடங்குகிறது. இதில் தவானுக்குப் பதிலாக லோகேஷ் ராகுல் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது. ரோகித் சர்மாவிற்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம்.

இந்நிலையில் விராட் கோலி தனது அணியின் காம்பினேசன் மீது நம்பிக்கை வைத்து, பெரிய அளவில் மாற்றம் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘ விராட் கோலி அணியின் காம்பினேசன் குறித்து அதிக அளவில் கவலைப்படக் கூடாது. கேஎல் ராகுல், ரகானே ஆகியோர் வெளிநாட்டு மண்ணில் அதிக ரன்கள் குவித்தால் கூட, இந்திய அணியால் அடிக்கடி வீரர்களை மாற்ற முடியாது. தற்போதைய பேட்டிங் மீது அவர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். அதேபோல் அடுத்த போட்டிக்கும் அப்படியே தொடர வேண்டும். இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. இரண்டு போட்டியே முடிவை எட்டும் என்று நினைக்கிறேன்.



நாம் காம்பினேசன் குறித்து அதிக அளவில் பேசுகிறோம். ஐந்து பந்து வீச்சாளர்களுடன் சரியான திசையில் இந்தியா சென்று கொண்டிருக்கிறது. டெஸ்ட் போட்டியில் 20 விக்கெட்டுக்களை வீழ்த்தியக் கூடிய அதேவேளையில் ரன்கள் குவிப்பதும் முக்கியமானது.

இந்திய அணியால் வெற்றி பெற முடியும் என்று நாம் நினைக்கிறோம். அதற்கு நமது பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுக்களை வீழ்த்தியதுதான் முக்கிய காரணம். அடுத்த இரண்டு போட்டியிலும் பவுலர்கள் அவர்கள் பணியை தொடர்வது முக்கியமானதாகும்’’ என்றார். #SAvIND #south africa vs india #CenturionTest
Tags:    

Similar News