செய்திகள்

பகல் - இரவு டெஸ்ட் தவிர்க்க முடியாதது: கங்குலி சொல்கிறார்

Published On 2017-12-15 07:27 GMT   |   Update On 2017-12-15 07:27 GMT
இந்தியாவில் பகல் - இரவு டெஸ்ட் தவிர்க்க முடியாதது என முன்னாள் இந்திய அணி கேப்டனும், மேற்கு வங்காள கிரிக்கெட் வாரிய தலைவரும் ஆன கங்குலி தெரிவித்துள்ளார்.
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகப்படுத்திய பிறகு, ரசிகர்களிடையே டெஸ்ட் போட்டிற்கான ஆர்வம் பெரிய அளவில் குறைந்து வருகிறது. இந்தியாவில் எப்போது போட்டி நடத்தினாலும் மைதானம் நிரம்பிக் காணப்படும். தற்போது டெஸ்ட் போட்டி நடைபெறும்போது மைதானம் வெறிச்சோடி காணப்படுகிறது.

பெரும்பாலான நாடுகள் பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்தியுள்ள நிலையில், இந்தியா இன்னும் பகல் - இரவு போட்டியை நடத்தவில்லை. இந்நிலையில் பகல் - இரவு டெஸ்ட் தவிர்க்க முடியாத ஒன்று என்று கங்குலி தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘பகல் - இரவு டெஸ்ட் தவிர்க்க முடியாதது. இது என்றாவது ஒருநாள் நடக்க வேண்டும். ரெட் பாலிற்குப் பதிலாக பிங்க் பால் பயன்படுத்த வேண்டும். இது மிகவும் எளிது. இப்படி செய்தால் மாலை நேரத்தில் ரசிகர்கள் மைதானம் வந்து விளையாட்டை ரசிப்பார்கள்.

நான் இலங்கை அணிக்காக வருந்துகிறேன். இதற்கு முன்பு சேவாக் மற்றம் சச்சின் ஆகியோர் அந்த அணியை துவம்சம் செய்தனர். தற்போது விராட் கோலி, ரோகித் சர்மா அந்த வேலையை செய்கிறார்கள்’’ என்றார்.
Tags:    

Similar News