செய்திகள்

தென்ஆப்பிரிக்காவில் பவுன்சரை எதி்ர்கொள்ள தயாராகுவதற்கு போதுமான நேரம் இல்லை: விராட் கோலி

Published On 2017-11-23 11:39 GMT   |   Update On 2017-11-23 11:39 GMT
தொடர்ந்து விளையாடிய வரும் நிலையில் முக்கியமானதாக கருதப்படும் தென்ஆப்பிரிக்க தொடருக்கு போதுமான நேரம் இல்லை என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கைக்கு எதிராக 3- டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள்,  3-20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இலங்கைக்கு எதிரான தொடர் வரும் டிசம்பர் 24-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்த தொடர் முடிந்த மூன்று தினங்களில் (27- ம் தேதி) தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள்,  மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் விளையாட உள்ளது.



இலங்கைக்கு எதிரான தொடர் முடிந்ததும் தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி செல்வதால், இந்திய அணி, பவுன்ஸ் ஆகும் ஆடுகளங்களில் பயிற்சி பெற போதிய அவகாசம் இல்லை என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை துவங்க உள்ள நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி கலந்து கொண்டார்.

விராட் கோலியிடம்,  ‘‘நீங்கள் பவுன்ஸ் ஆகும் ஆடுகளங்கள் கேட்பீர்களா?’’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.



'இக்கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி, “ஆமாம் நாங்கள் அந்த வகையான ஆடுகளங்களையே கேட்போம். ஏனெனில் துரதிருஷ்டவசமாக தென் ஆப்பிரிக்கா செல்வதற்கு முன் எங்களுக்கு வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது. எனவே, எங்களுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை. எனவே, அடுத்து வரவிருக்கும் போட்டிக்கான சூழலை பெற முயற்சிப்போம்” என்றார்.

Tags:    

Similar News